பெட்ரோல் பங்க் ஊழியரை அரிவாளால் வெட்டி பணத்தை கொள்ளையடித்த 7 பேர் கைது

Dec 27, 2018 11:04 AM 288

சிதம்பரம் அருகே பெட்ரோல் பங்கு ஊழியரை அரிவாளால் வெட்டி, பணத்தை கொள்ளையடித்த சம்பவத்தில் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே புதுச்சத்திரத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் நேற்றிரவு ஊழியர் சிவசங்கர் என்பவர் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த மர்ம கும்பல், தங்களது இருசக்கர வானத்திற்கு பெட்ரோல் போட்டுள்ளனர். திடீரென சிவசங்கரின் கையிலிருந்த பணப்பையை பறித்த அவர்கள், சிவசங்கரனை அரிவாளால் பயங்கரமாக தாக்கினர். இதில், பலத்த காயமடைந்த அவரிடம் இருந்து பணப் பையை மர்ம கும்பல் பறித்துக் கொண்டு தப்பியது. படுகாயமடைந்த சிவசங்கரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துரிதமாக செயல்பட்டு, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட 7 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comment

Successfully posted