தமிழகத்தில் 7 சிறப்பு ரயில்கள் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ரத்து!!

Aug 14, 2020 04:06 PM 1122

தமிழகத்தில் 7 சிறப்பு ரயில்கள் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்து சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று வரும் 31ம் தேதி வரை, 7 சிறப்பு ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, திருச்சி - செங்கல்பட்டு, மதுரை - விழுப்புரம், கோவை - காட்பாடி ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும் திருச்சி - செங்கல்பட்டு, அரக்கோணம் - கோவை, கோவை - மயிலாடுதுறை, திருச்சி - நாகர்கோவில் இடையே இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில்கள் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகளுக்கு 100 சதவீத கட்டண தொகையும் திருப்பி வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Comment

Successfully posted