பெண்களைப் பின்தொடர்ந்து தொந்தரவு செய்தால் 7 ஆண்டுகள் தண்டனை - சட்டத்தில் திருத்தம்!

Sep 16, 2020 03:55 PM 441

வரதட்சணை கொடுமைக்கான தண்டனையை 10 ஆண்டுகளாக உயர்த்த சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று 110 விதியின் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, குழந்தைகள் மற்றும் பெண்கள் தொடர்பான சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அதன்படி, வரதட்சணைக் கொடுமை வழக்குகளில் வழங்கப்படும் தண்டனையானது 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தப்படும்;  குற்றநோக்குடன் செயல்படுவர்களுக்கான தண்டனைக் காலம் 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்படும்.

பெண்களைப் பின்தொடர்ந்து தொந்தரவு செய்தால் 7 ஆண்டுகள் தண்டனை வழங்கப்படும் எனக் கூறிய முதலமைச்சர், 18 வயதுக்கு உள்பட்டோரை பாலியல்தொழிலுக்கு விற்கும் நபர்களுக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வழங்கப்படும் எனும் தகவலையும் தெரிவித்தார். 

Comment

Successfully posted