7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் ; விரைவில் ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் - அமைச்சர் சி.வி.சண்முகம்

Oct 17, 2020 03:45 PM 2458

அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு விரைவில் ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் நம்பிக்கை தெரிவித்தார்.

அ.தி.மு.க.வின் 49-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கட்சிக்கொடியை ஏற்றி வைத்தார். பின்னர், அ.தி.மு.க தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்தும், ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி. சண்முகம், அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆளுநர் விரைவில் ஒப்புதல் அளிப்பார் என நம்பிக்கை தெரிவித்தார்.

Comment

Successfully posted