71 ஜோடிகளுக்கு அதிமுக சார்பில் திருமணம்

Mar 03, 2019 04:34 PM 297

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு, 71 ஜோடிகளுக்கு திருமணம் செய்யும் நிகழ்ச்சி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.

தேனி மாவட்டம் லட்சுமிபுரத்தில் நடைபெற்ற இந்த திருமண விழாவிற்கு, தேனி மாவட்ட அதிமுக சார்பில் ஏற்பாடுகள் நடைபெற்றன. திருமண நிகழ்ச்சியில், துணை முதலமைச்சருடன், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேளதாளம் முழங்க, 71வகையான சீர் வரிசைகளுடன், 71 ஜோடிகளுக்கு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திருமணத்தை நடத்தி வைத்தார்.

Comment

Successfully posted