72வது சுதந்திர தினத்தையொட்டி கூகுள் நிறுவனம் வெளியிட்ட டூடுல்

Aug 15, 2018 12:09 PM 697

இந்தியாவின் 72 வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை கவுரவிக்கும் விதமாக பிரபல தேடுதல் தளமான கூகுள், (GOOGLE) டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கூகுள் என்ற எழுத்துக்கு இடையில் இந்தியாவின் தேசிய பறவையான மயில் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது, மயிலின்  இடதுபுறத்தில் யானையும், வலதுபுறத்தில் இந்தியாவின் தேசிய விலங்கான புலியும் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு கீழ் பகுதியில், இந்திய தேசிய கொடி வரையப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த டூடுல் அனைவரையும் கவர்ந்து வருகிறது .

Comment

Successfully posted