74 சிறப்பு ரயில் சேவைகள் ரத்து

May 07, 2021 09:08 AM 876

மதுரை கோட்டத்தில் இயக்கப்படும் பல்வேறு முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.

அதன்படி, மதுரை - சென்னை எழும்பூர் வைகை சிறப்பு ரயில் மே 8ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையும், சென்னை எழும்பூர் - மதுரை வைகை சிறப்பு ரயில் மே 9ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரையும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. காரைக்குடி - சென்னை எழும்பூர் பல்லவன் சிறப்பு ரயில் மே 9 முதல் ஜூன் 1 வரையும், மறுமார்க்கத்தில் மே 8 முதல் மே 31 வரையும் ரத்து செய்யப்படுகிறது. இதேபோல், சென்னை எழும்பூர் - மதுரை - சென்னை எழும்பூர் தேஜாஸ் சிறப்பு ரயில் மே 8 முதல் மே 31 வரையும், சென்னை எழும்பூர் - மதுரை வாரமிருமுறை சேவை சிறப்பு ரயில் மே 14, 16, 21, 23, 28, 30 ஆகிய நாட்களிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை சென்ட்ரல் - மதுரை வாரம் மும்முறை சேவை சிறப்பு ரயில், சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயில், தாம்பரம் - நாகர்கோவில் தினசரி சேவை சிறப்பு ரயில், தாம்பரம் - நாகர்கோவில் வாரம் மும்முறை சேவை சிறப்பு ரயில், திருநெல்வேலி - பாலக்காடு பாலருவி சிறப்பு ரயில் மே மாதம் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted