ஸ்டெர்லைட் மூடப்பட்ட பிறகு தூத்துக்குடியில் காற்று மாசு 75 % குறைவு- மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

Oct 28, 2018 05:53 PM 287

 

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு தூத்துக்குடியில் காற்று மாசு 75 சதவிகிதம் குறைந்துள்ளதாக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

காற்றின் தரம் தொடர்பான தரவுப் பட்டியலை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில்,ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு தூத்துக்குடியில் நச்சுத்தன்மை மிக்க சல்பர்டை ஆக்சைடு கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது எடுக்கப்பட்ட காற்றின் தரம் குறித்த கணக்கெடுப்பில் காற்று மாசு 75 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக இரண்டாவது நாளாக இன்று சென்னை பசுமை தீர்ப்பாயத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற வைகோவும் காற்று மாசு குறைந்துள்ளதைக் குறிப்பிட்டுள்ளார்.

Comment

Successfully posted