குளித்தலை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 785 காளைகள் பங்கேற்பு

Jan 18, 2020 07:31 AM 461

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள ராச்சாண்டர் திருமலையில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் 785 காளைகள் களமிறக்கப்பட்டன.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள தோகைமலை ஊராட்சி ஒன்றியத்துக்குப்பட்ட, ராட்சாண்டர் மலையில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. போட்டியை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தொடங்கி வைத்தார். இதில் 758 காளைகள் களமிறக்கப்பட்டன. அதுபோல், 450 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர்.

காளைகளை அடக்கிய வீரர்களுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், 20 தங்கக் காசுகளை பரிசாக வழங்கினார். இதில் 16 காளைகளை அடக்கிய மணப்பாறையைச் சேர்ந்த மரியா ஆனந்த் என்பவர் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டு, பிரிட்ஜ் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணம் பரிசாக வழங்கப்பட்டது. காலை 8 மணிக்குத் தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டு, மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது.

Comment

Successfully posted