8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: கைதான நபருக்கு பிப்.6-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

Jan 24, 2020 06:59 AM 104

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே, 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைதான, அசாம் இளைஞரை, அடுத்த மாதம் 6ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொங்கலபுரத்தை சேர்ந்த சிறுமி மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 20ஆம் தேதி பள்ளிக்கு சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில், அடுத்த நாள் காலை கொங்கலபுரம் காட்டுப்பகுதியில் சிறுமி சடலமாக கிடந்தார். பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 6 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், அசாம் மாநிலத்தை சேர்ந்த மஜம் அலி என்பவரை கைது செய்தனர். இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மஜம் அலியை, அடுத்த மாதம் 6ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி பரிமளா உத்தரவிட்டார்.

Comment

Successfully posted