மும்பையில் டவ் தே புயலில் சிக்கி மாயமான 80 க்கும் மேற்பட்ட ஓஎன்ஜிசி ஊழியர்களைத் தேடும் பணி இரண்டாவது நாளாக தீவிரம்

May 19, 2021 01:53 PM 403

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் டவ் தே புயலில் சிக்கி மாயமான 80 க்கும் மேற்பட்ட ஓஎன்ஜிசி ஊழியர்களைத் தேடும் பணி இரண்டாவது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மும்பை அருகேயுள்ள அரபிக் கடல் பகுதியில், 800க்கும் ஓஎன்ஜிசி மற்றும் தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியர்கள் எண்ணெய் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

டவ்-தே புயல் குஜராத்தின் அரபிக் கடல் பகுதியைக் கடந்த போது இவர்கள் தங்கியிருந்த கப்பல்களுக்குள் தண்ணீர் புகுந்தது.

இது குறித்து தகவலறிந்த கடலோர காவல் படையினர் மற்றும் இந்திய கப்பற்படையினர் அவர்களின் 700க்கும் மேற்பட்டோரை பத்திரமாக மீட்டனர்.

மேலும் மாயமான 80க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணியில் கப்பற்படை மற்றும் விமானப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

2 வது நாளாக தேடும் பணி தொடர்ந்து வரும் நிலையில், காணாமல் போனவர்கள் குறித்த தகவல் கிடைக்காததால் அவர்களது உறவினர்கள் அச்சமடைந்துள்ளனர்

Comment

Successfully posted