அன்பையும், நம்பிக்கையையும் மட்டுமே விதைக்க விரும்புகிறோம் - ’800’ படக்குழு அறிக்கை

Oct 15, 2020 09:01 AM 954

ஈழத் தமிழர் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் காட்சிகள் எதுவும் விஜய் சேதுபதி நடிக்கும் 800 திரைப்படத்தில் இருக்காது என தயாரிப்பு நிறுவனமான DAR விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “800” திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட படமே தவிர, இதில் எந்த வித அரசியலும் கிடையாது என்று தெரிவித்துள்ளது. ஈழத்தமிழர்களின் போராட்டத்தை சிறுமைப்படுத்தும் காட்சிகள் இந்த படத்தில் கிடையாது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

’800’ திரைப்படத்தில் இலங்கையைச் சேர்ந்த பல தமிழ் திரைத்துறை கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்குபெற இருக்கின்றனர் என்றும், அவர்களின் திறமையை உலக அரங்கில் வெளிப்படுத்த இந்த படம் நிச்சயமாக ஒரு அடித்தளம் அமைத்து தரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லைகளைக் கடந்து மக்களையும், மனிதத்தையும் இணைப்பது தான் கலை என தெரிவித்துள்ள தயாரிப்பு நிறுவனம், அன்பையும், நம்பிக்கையையும் மட்டுமே விதைக்க விரும்புவதாகவும் விளக்கமளித்துள்ளது.

Comment

Successfully posted