81ஆயிரம் மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிடும் பணி தீவிரம்

Jul 11, 2019 10:09 PM 31

81ஆயிரம் மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிடும் பணி நடைபெற்று வருவதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை எழிலகத்தில் உணவு மற்றும் நுகர் பொருள் வழங்கல் துறையின் முது நிலை மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்குப் பின்னர் நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட தற்போது வரை 1 கோடியே 99 லட்சத்து 97ஆயிரம் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், 81ஆயிரத்து 903 மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிடும் பணி நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

Comment

Successfully posted