ஒகேனக்கல்லில் ஆடிப்பெருக்கு நிறைவு விழாவில், ரூ.82.89 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

Aug 06, 2019 09:28 AM 211

ஒகேனக்கல்லில் ஆடிப்பெருக்கு நிறைவு விழாவில், 212 பயனாளிகளுக்கு 82 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்டங்களை, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் வழங்கினர்.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆடிப்பெருக்கு நிறைவு விழா நடைபெற்றது. இவ்விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே பி அன்பழகன், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் பங்கேற்று, 212 பயனாளிகளுக்கு 82 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

2015 ஆம் ஆண்டுக்கு பின்னர், ஒகேனக்கலுக்கு ஆண்டுக்கு ஒரு கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதாவும், சுற்றுலா தளத்தை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு, ஒகேனக்கலில் 13.8 கிலோ மீட்டர் தொலைவிற்கு நான்கு வழிச்சாலை அமைக்க, 44 கோடியே 63 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடந்து வருவதாகவும் அமைச்சர்கள் தெரிவித்தனர்.

இந்த விழாவில், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக தமிழக பாரம்பரியமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Comment

Successfully posted