கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 855 கன அடி தண்ணீர் திறப்பு

Jul 17, 2019 03:07 PM 107

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 855 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கர்நாடகாவின் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து காவிரியில் 855 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 355 கன அடியும், கபினி அணையில் இருந்து 500 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மழை தீவிரமடைந்ததால் தண்ணீர் திறப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, குடகு மாவட்டத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கர்நாடக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

Comment

Successfully posted