9 மாவட்ட அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது

Feb 16, 2020 08:09 AM 454

தேனி உட்பட 9 மாவட்ட அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம், ராயப்பேட்டையிலுள்ள தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெறுகிறது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்தும், தேர்தல் பணிகள் குறித்தும், அனைத்து மாவட்டங்களின் தலைமை கழக நிர்வாகிகள், செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர் பெருமக்கள் ஆகியோர் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம், அதிமுக தலைமைக் கழகத்தில் 12ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு தேனி, அரியலூர், தருமபுரி, கோவை மாநகர், கோவை புறநகர், திருப்பூர் மாநகர் மற்றும் திருப்பூர் புறநகர் கழக நிர்வாகிகளுடனும், மாலை 4 மணிக்கு சேலம் மாநகர், சேலம் புறநகர், நாமக்கல், கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு, ஈரோடு மாநகர் மற்றும் ஈரோடு புறநகர் கழக நிர்வாகிகளுடனும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

Comment

Successfully posted