அரக்கோணதில் 93-வது ஹெலிகாப்டர் பைலட் பயிற்சி நிறைவு விழா

Nov 29, 2019 01:42 PM 418

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள ஐஎன்எஸ் ராஜாளி கப்பற்படை விமான தளத்தில் 93-வது ஹெலிகாப்டர் பைலட் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.

ஐஎன்எஸ் ராஜாளி கப்பற்படை விமான தள வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 9 கப்பற்படை வீரர்கள் பயிற்சி நிறைவு பெற்றனர். இதில் கடற்படை ரியர் அட்மிரல் ஜோதிஸ் குமார் பங்கேற்று வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். 20 வார காலம் பயிற்சியில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பயிற்சி நிறுவனத்தின் கமாண்டிங் அதிகாரிகள், வீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comment

Successfully posted