மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பு 95% முடிந்துவிட்டது - ’அவதார்’ இயக்குநர் தகவல்

Sep 30, 2020 08:46 AM 895

உலகப் புகழ்பெற்ற அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக, படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார்.

’டைட்டானிக்’ படத்தின் மூலம் உலக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன். 2009 ஆம் ஆண்டு ’அவதார்’ படத்தின் மூலம் உலகையே திரும்பி பார்க்க வைத்தார். 200 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம், சுமார் 25,000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, சாதனை படைத்தது.

அவதார் திரைப்படத்தின் வரவேற்பு அபரிமிதமாக இருந்ததால், அடுத்தடுத்து 4 பாகங்களை உருவாக்க இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் முடிவு செய்தார். கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட அவதார் 2 படத்தின் படப்பிடிப்பு, மீண்டும் தொடங்கிய நிலையில், தற்போது 2ம் பாகத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இரண்டாம் பாகத்தின் வெளியீடு ஒரு வருடம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்தாண்டு டிசம்பர் மாதம் படம் திரைக்கு வரும் எனவும் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார். மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பு 95% முடிந்து உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Comment

Successfully posted