ஜி.எஸ்.டி சம்பந்தமான 95 சதவீத வழக்குகள் சுமூகமாக முடிந்துள்ளது: நிர்மலா சீதாராமன்

Jan 20, 2020 09:06 AM 191

ஜி.எஸ்.டி சம்பந்தமாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் 95 சதவீத வழக்குகள் சுமூகமாக முடிந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூரில் நடந்த பால்கிவலா நூற்றாண்டு விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், மருத்துவம், அடிப்படை கட்டமைப்புகள் உட்பட பல்வேறு துறைகளில் ஜி.டி.பி 61 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக கூறியுள்ளார். மத்திய அரசு புதிய தொழில்நுட்பங்களில் அதிக அக்கறையுடன் செயல்படுவதாகவும், ஆதார் அட்டை  தொழில் வளர்ச்சிகளை மேம்படுத்த எளிமையான வழிமுறைகளை வகுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்ததால் வங்கிகளுக்கு செல்லும் சூழல் குறைந்துள்ளதாகவும், ஜி.எஸ்.டி சம்பந்தமாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் 95 சதவீத வழக்குகள் சுமூகமாக முடிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted