ஒத்த செருப்பு திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு தகுதியுடையது: அமைச்சர் கடம்பூர் ராஜூ

Oct 03, 2019 08:18 AM 273

ஒத்த செருப்பு திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு தகுதியுடையது என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

சென்னை சர்வதேச திரைப்படத் திருவிழாவிற்கு வழங்கி வந்த 50 லட்சம் நிதி உதவியை 75 லட்சமாக உயர்த்தி வழங்க தமிழக அரசு ஆணை பிறபித்தது. இதனையடுத்து, நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அமைச்சர் கடம்பூர் ராஜூவை நேரில் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், திரையரங்க டிக்கெட்டுகளை அரசே ஆன்லைன் மூலம் விற்பனை செய்வது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாகவும், அதேசமயம் அம்மா திரையரங்கம் குறித்தும் முதலமைச்சரிடம் விவாதிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். ஒத்த செருப்பு திரைப்படம் தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்படும் என்றும் கூறினார்.

இந்நிலையில் சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கான நிதியுதவியை 75 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிய தமிழக அரசுக்கு நடிகர் பார்த்திபன் நன்றி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், சிறிய திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் விதமாக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளதாகவும் கூறினார்.

Comment

Successfully posted