13 வயது சிறுமியைக் கர்ப்பமாக்கிய தந்தை கைது

Feb 13, 2019 06:42 AM 327

கோவை வெள்ளிமேடு பகுதியில் ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுமியை கர்ப்பமாக்கிய தந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

சிறுமியின் தாயார் தனியார் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாள்களாக சிறுமி உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்ட தாயார் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தனர். சிறுமியிடம் நடத்திய விசாரணையில் தந்தையே மகளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Comment

Successfully posted