விஸ்வாசம் பட டிக்கெட்டிற்கு பணம் தராததால் தந்தையை எரித்த அஜித்குமார்

Jan 10, 2019 09:35 AM 965

விஸ்வாசம் படத்திற்கு செல்ல பணம் கொடுக்காததால் தந்தையை எரிக்க முயன்ற மகனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விஸ்வாசம் படம் இன்று காலை முதலே வெளியாகி மிகவும் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது, மேலும் அதனை ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடி கொண்டிருக்கும் நிலையில், இந்த சம்பவம் சற்றே நம்மை உறைய வைக்கிறது. வேலூர் மாவட்டம், கழிஞ்ச்சூரை சேர்ந்தவர் அஜித்குமார் வயது 20.இவர் நள்ளிரவு வெளியான நடிகர் அஜித்குமார் நடித்த விஸ்வாசம் படத்தினை பார்க்க வேண்டும் என்று தனது தந்தையிடம் பணம் கேட்டுள்ளார்.அவரது தந்தை பணம் தர மறுத்ததால் தூங்கிகொண்டிருந்த அவரது தந்தை 45 வயதுடைய பாண்டியன் முகத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்து கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார்.தற்போது அவரது தந்தை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதியாகி சிகிக்சை பெற்று வருகிறார்.இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த சம்பவமானது அந்த பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த கொடூர செயலானது நடிகர் அஜித்குமார் மீது அவர் கொண்ட விஸ்வாசத்தால் செய்ததா, இல்லை தந்தையின் மீது உள்ள வெறுப்பால் செய்ததா என தெரியவில்லை.தற்போதெல்லாம் இளைஞர்கள் அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களின் மீது அன்பை காட்டுவதை விட, நடிகர்கள் மீதும் நடிகைகள் மீதும் அதீத பாசம் கொண்டுள்ளனர். பாசம் வைப்பது தப்பில்லை, ஆனால் அவர்களுக்காக பெற்று வளர்த்த தந்தையை எரித்துள்ள சம்பவம் ஏற்றுகொள்ள முடியாத ஒன்று என மக்கள் கருதுகின்றனர்.

Comment

Successfully posted