நாகேஸ்வர் ராவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

Jan 12, 2019 12:09 PM 278

சிபிஐ இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர் ராவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இரு அதிகாரிகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து மீண்டும் சிபிஐ இயக்குநராக பொறுப்பேற்ற அலோக் வர்மா இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர் ராவ் பிறப்பித்த அதிகாரிகளின் பணியிடமாற்ற உத்தரவுகளை ரத்து செய்தார். இதனிடையே தீணையப்புத்துறை இயக்குநராக அலோக் வர்மா பணியிடமாற்றம் செய்யப்பட்டத்தை தொடர்ந்து நாகேஸ்வர் ராவ் மீண்டும் சிபிஐ இடைக்கால இயக்குநராக பதவியேற்றார். இதனையடுத்து அலோக் வர்மா பிறப்பித்த பணியிடமாற்ற உத்தரவுகளை நாகேஸ்வர் ராவ் ரத்து செய்தார். இதன் காரணமாக அதிருப்தி அடைந்த 2 அதிகாரிகள், நாகேஸ்வர் ராவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சிபிஐ வட்டாரத்தில் பரபரப்பு அதிகரித்துள்ளது.

Comment

Successfully posted