காவல்துறை அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற விளையாட்டு போட்டி

Jan 15, 2020 06:49 AM 1708

சென்னை அரும்பாக்கத்தில் காவல்துறை அதிகாரிகளுக்கு இடையே நடந்த கிரிக்கெட் போட்டியில், ஏராளமான அதிகாரிகள் கலந்து கொண்டு உற்சாகமாக விளையாடினர்.

சென்னை அரும்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் காவல்துறை அதிகாரிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடைப்பெற்றன. காவல்துறையில் பணியாற்றும் ஆண் காவலர்களுக்கு கிரிக்கெட் போட்டியும், பெண் காவலர்களுக்கு த்ரோ பால் போட்டிகளும் நடைப்பெற்றன. கிரிக்கெட் போட்டியில் மேற்கு மண்டல அணியும், வடக்கு மண்டல அணியும் மோதின. இதில், மேற்கு மண்டல காவல்துறை அணி வெற்றி பெற்றது. த்ரோ பால் போட்டியில், மேற்குமண்டல அணி வெற்றி பெற்றது. இந்த விளையாட்டு போட்டிகள், பணிச் சுமைக்கு இடையே  புத்துணர்வையும், ஒற்றுமையும் ஏற்படுத்துவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comment

Successfully posted