கோவை அருகே குடிபோதையில் மகனை கொன்ற தந்தை

Aug 13, 2019 09:41 PM 181

கோவை கவுண்டம்பாளையம் மாநகராட்சி உட்பட்ட சக்தி நகர் பகுதியில் வசிக்கும் ஆந்திரப்பிரதேசம் மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் மின்னராவ். இவர் கட்டிட வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். அவரது மகன் மகேஷும் தந்தைக்கு உதவியாக கட்டிட வேலைக்கு சென்று வருகிறார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை வேலை இல்லை என்பதால் மின்னராவ் மற்றும் மகேஷ் ஆகிய இருவருமே மது அருந்தியதாக தெரிகிறது. அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி தாக்கியுள்ளனர்.

மின்னராவ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தனது மகன் மகேஷின் வயிற்றில் குத்தியுள்ளார் இதில் பலத்த காயமடைந்த மகேஷ் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் மயக்கமடைந்தார் உடனடியாக அருகில் இருக்கும் பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு மகேஷை கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே மகேஷ் பரிதாபமாக உயிரிழந்துள்ளாதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர். இதுகுறித்து துடியலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மகனை கொலை செய்த தந்தை மின்னராவை கைது செய்தனர். குடிபோதையில் தான் பெற்ற மகன் என்றும் பாராமல் தந்தை கத்தி எடுத்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comment

Successfully posted