வண்டலூர் உயிரியல் பூங்காவில் பிறந்த ஆண் புலிக்குட்டி !

Oct 14, 2018 01:31 PM 454

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பெண் புலி ஒன்று ஆண் குட்டி ஒன்றை ஈன்றுள்ளது.

சென்னையை அடுத்த வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் சத்தியமங்கல காடுகளில் இருந்து மீட்கப்பட்ட உத்ரா என்ற பெண் புலி பராமரிக்கப்பட்டு வருகிறது.

உத்ரா கடந்த 7 வாரங்களுக்கு முன்பு 2 குட்டிளை ஈன்றது. அதில் ஒரு குட்டி இறந்து விட மற்றொரு குட்டியை வன விலங்கு மருத்துவர்கள் பராமரித்து வந்தனர். 

இந்த புலிக்குட்டி தற்போது நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளது. இந்தநிலையில், புலிக் குட்டியின் புகைப்படத்தை உயிரியல் பூங்கா அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். 4 மாதங்களுக்கு பிறகு புலிக்குட்டியை பார்க்க பார்வையாளர்கள் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related items

Comment

Successfully posted