பத்ரிநாத் கோவிலைச் சுற்றிச் சூழ்ந்த பனிப் படலம் - 42 பக்தர்கள் முகாமில் சிக்கியுள்ளதாக தகவல்

Nov 05, 2018 10:48 AM 318

கேதார்நாத்தில் பெய்து வரும் கடும் பனிப் பொழிவு காரணமாக, கோயிலுக்குச் சென்ற பக்தர்கள் பலர், முகாமில் சிக்கிக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள பத்ரிநாத் கோயிலுக்கு பல்வேறு வெளிமாநிலங்களைச் சேர்ந்த யாத்ரீகர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சாமோலி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் பத்ரிநாத் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகள் பனிக்கட்டிகளால் சூழப்ப்பட்டுள்ளது.

சாலைகளில் பனி படர்ந்துள்ளதால், போக்குவரத்து சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பதிரிநாத் கோவிலுக்குச் சென்ற ஒடிசாவைச் சேர்ந்த 42 பக்தர்கள் முகாமில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.Comment

Successfully posted