நிலத்தகராறில் இளைஞரை வெட்டிக் கொன்ற 10 பேர் கொண்ட கும்பல்

Dec 21, 2019 01:20 PM 357

திருவண்ணாமலை அருகே நிலத்தகராறில், இளைஞரை 10 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்த சம்பவம் தெடர்பாக, காவல்துறையினர் தீவிர விசாரனை மேற்கொண்டுள்ளனர்.

தண்டராம்பட்டு தாலுக்கா தென்முடியனூர் பகுதியில் வசித்து வரும் மாரிமுத்து என்பவருக்கும், அவரது பங்காளிகளான, ஏழுமலை, ஆனந்தன் ஆகியோருக்கும் இடையே, சொத்து தொடர்பாக தொடர் தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், தேவராஜ் என்பவருடன் வந்த ஏழுமலை, பயங்கர ஆயுதங்களுடன் மாரிமுத்துவிடம் தகறாரில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த மாரிமுத்துவின் மகன் அமர்நாத், தனது செல்போனில் படம் பிடிக்க முற்பட்டபோது, தகராறில் ஈடுபட்டவர்கள் அமர்நாத்தை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் அமர்நாத் உயிரிழந்த நிலையில், படுகொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

Comment

Successfully posted