காதலித்து ஏமாற்றிய பெண்ணை குத்திக் கொலை செய்த இளைஞர்

Nov 28, 2018 12:33 PM 230

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் காதலித்து ஏமாற்றிய பெண்ணை, இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வள்ளியூரில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் மெர்சி என்ற பெண்ணும், அதே பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன் என்ற இளைஞரும் பணியாற்றி வந்துள்ளனர். இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரவீந்திரன் வேலையில் இருந்து நின்றுவிட்டதால், மெர்சி வேறு ஒரு நபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ரவீந்திரன், மெர்சியை வள்ளியூர் பேருந்து நிலையத்தின் அருகில் வரவழைத்து கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மெர்சி அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அந்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

 

Comment

Successfully posted