ஊர் மக்கள் முன்னிலையில் மனைவியை கடுமையாக தாக்கிய காவலர்

Feb 12, 2020 05:52 PM 190

மத்திய பிரதேசத்தில் காவலர் ஒருவர் தனது மனைவியை கொடூரமாக தாக்கும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தின் மனவார் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. கந்த்வானி காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர் நரேந்திர சூர்யவன்ஷி தனது மனைவியை ஊர் மக்கள் முன்னிலையில் தரதரவென இழுத்து தள்ளி கடுமையாக தாக்கியுள்ளார். மேலும், தனது காலணியை கழற்றி தனது மனைவியை அடித்துள்ளார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவலர் நரேந்திர சூர்யவன்ஷிக்கு வேறொரு பெண்ணுடன் உள்ள தொடர்பு பற்றி கேள்வி எழுப்பியதால் மனைவியை அவர் தாக்கியதாக கூறப்படுகிறது.

Comment

Successfully posted