தனியார் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

Nov 09, 2018 11:48 AM 379

பூந்தமல்லி அருகே தனியார் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 80 லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட குட்காவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

கடந்த மாதம் சென்னை அடையாறில் 100 கிலோ குட்காவுடன் புருஷோத்தமன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில், பூந்தமல்லியை அடுத்த பாரிவாக்கம் அருகே உள் தனியார் கிடங்கில் ஆய்வு செய்தனர்.

அங்கிருந்து 100 கிலோ குட்காவை அவர்கள் கைப்பற்றினர். இதன் மதிப்பு 80 லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது. குட்கா பறிமுதல் செய்யப்பட்ட இடம், பூந்தமல்லி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்டது என்பதால், அவர்களுக்கு தகவல் தரப்பட்டது. பின்னர் அங்கு விரைந்த பூந்தமல்லி போலீசார், குட்காவை பறிமுதல் செய்ததோடு, தனியர் கிடங்கு உரிமையாளரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comment

Successfully posted