சொகுசு பேருந்து மோதியதில் 3 பேர் உயிரிழப்பு

Jun 13, 2019 02:39 PM 63


சென்னை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தியாகதுருகம் அருகே லாரி மீது சொகுசு பேருந்து மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர்.

தியாகதுருகம் அருகே மேம்பாலத்தின் மீது சென்னையில் இருந்து சேலம் நோக்கி ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது, அப்போது கம்பி ஏற்றி வந்த லாரி திடீரென சாலையில் புகுந்தது. ஆம்னி பேருந்தின் ஓட்டுநர் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததால் லாரி மீது பேருந்து மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 3 பேர் பரிதாபமாக பலியாகினர். பலத்த காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comment

Successfully posted