கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும் நவீன கருவி !!!

Jun 30, 2020 10:23 PM 1265

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடலை, மரியாதையுடன் அடக்கம் செய்யும் நவீன இயந்திரத்தை தனியார் நிறுவனம் ஒன்று வடிவமைத்துள்ளது. கொரோனா எனும் கொடிய வைரஸ் ஏற்படுத்திய மிகச் சோகமான உளவியல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போகும், அந்த இயந்திரம் பற்றிய ஒரு சிறப்புப் பார்வை...

கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தையும், தன் கோரக் கரங்களுக்குள் சிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. கொரோனா பரவலின் வேகமும்... அதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும்... ஏற்படும் மரணங்களும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. வல்லரசு நாடுகளே திணறிக் கொண்டிருக்கும் இந்த இக்கட்டான சூழலில், தமிழகம் கொரோனாவைக் கட்டுப்படுத்த சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், கொரோனாவின் தாக்குதலும், அது ஏற்படுத்திய சமூக, பொருளாதார, உளவியல் பிரச்னைகள் கடும் சவாலாக மாறி நிற்கின்றன.

அதில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தவர்களின் சடலத்தை அடக்கம் செய்வது மிகப்பெரும் சவாலாக இருக்கிறது. கொரோனா தொற்றால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்யும் மயானத் தொழிலாளர்களின் பாதுகாப்பு ஒரு பக்கம் அச்சமூட்டுகிறது. அதே நேரத்தில், உரிய மரியாதையுடன் இறந்தவரின் உடல் அடக்கம் செய்யப்படுவதில்லை என்கிற உறவினர்களின் ஆதங்கம் மறுபுறம் துயரமளிப்பதாக உள்ளது.

இதைக் கருத்தில் கொண்ட தனியார் நிறுவனம் ஒன்று, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் உடலை முழு மரியாதையுடன் அடக்கம் செய்யும் நவீன இயந்திரத்தைக் கண்டுபிடித்துள்ளது. 3 சக்கர ஆம்புலன்ஸ் வாகனத்துடன் இணைக்கப்பட்டு இந்தக் கருவி உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் உடலை இந்த இயந்திரத்தின் மத்தியில் வைத்துவிட்டால், Complete Autonomous System மூலம், யாருடைய உதவியுமின்றி அந்த இயந்திரமே அடக்கம் செய்துவிடுகிறது.

தமிழக அரசின் 'மாசில்லா தமிழகம்' என்ற திட்டத்தின் கீழ், மின்சார இயந்திரத்தைப் பயன்படுத்தி, உடல் அடக்கம் செய்யும் புதிய இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக, அதைத் தயாரித்துள்ள எம் ஆட்டோ (M Auto) நிறுவனத்தின் தலைவர் மன்சூர் அலிகான் குறிப்பிடுகிறார்.

வாழ்ந்தபோது ஒருவர் எப்படி வாழ்ந்திருந்தாலும்... இறந்தபிறகு அந்த மனிதரின் உயிரற்ற உடலுக்கு அவமரியாதை நேர்வது கொடுமையிலும் கொடுமை. அதை ஒரு இயந்திரம் தடுக்கிறதென்றால், அது வரவேற்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாய

Comment

Successfully posted