அரக்கோணத்தில் நவீன வசதி கொண்ட பல்நோக்கு மருத்துவமனை

Mar 11, 2019 06:32 AM 225

வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் 5 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதி கொண்ட பல்நோக்கு மருத்துவமனையின் புதிய கட்டடம் திறக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் அரக்கோணம் நகரில் அரசு மருத்துவமனையில் கூடுதல் வசதிகளுடன் கூடிய மருத்துவமனை அமைக்க அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ரவி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்திருந்தார். கோரிக்கையை ஏற்று இதற்கான நிதி ஒதுக்கீடு செய்து புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. இதனையடுத்து அரக்கோணம் நாடாளுமன்ற உருப்பினர் ஹரி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ரவி ஆகியோர் குத்து விளக்கேற்றி கட்டிடத்தை திறந்து வைத்தனர். இந்நிகழச்சியில் அரக்கோணம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட ஏராளாமானோர் கலந்து கொண்டனர்.

Comment

Successfully posted