நூதன முறையில் ஷோரூமில் இருசக்கர வாகன திருடிய நபர்

Dec 13, 2019 10:05 AM 504

விழுப்புரத்தில் பிரபல இருசக்கர வாகன ஷோரூமில் இருந்து நூதன முறையில் இருசக்கர வாகனம் திருடிய நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்...

திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பிரபல ராயல் என்ஃபீல்டு ஷோரூமில் கடந்த திங்கட்கிழமை மாலை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட சஞ்சீவ் என்பவர், ராயல் என்ஃபீல்டு இருசக்கர வாகனம் குறித்து கேட்டறிந்துள்ளார். இதனையடுத்து ஷோரூமிற்கு சென்ற அவர், ராயல் என்ஃபீல்டு வாகனத்தை சோதனை ஓட்டம் செய்ய எடுத்து சென்றுள்ளார். அப்போது, ஷோரூமின் ஊழியர் உடன் செல்லவிருந்த நிலையில், அவரிடம் தான் மற்றும் செல்வதாக கூறி எடுத்து சென்றுள்ளார். இதற்கிடையில், சோதனை ஓட்டத்தில் நடுவில் வாகனத்தில் பெட்ரோல் இல்லாமல் நடுவழியில் நின்று விட்டதாக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இந்த நிலையில் அவருக்கு ஏற்பட்ட சிரமத்திற்காக ஷோரூம் நிர்வாகம் பெட்ரோல் வாங்கி கொடுத்துள்ளது. இதனையடுத்து மீண்டும் சோதனை ஓட்டத்தை தொடர்ந்த அவர், நீண்ட நேரமாகியும் ஷோரூமிற்கு திரும்பவில்லை. இதனால் ஷோரூம் நிர்வாகம் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தது. இதனையடுத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி பதிவுகளை வைத்து அந்த நபரை தேடி வருகின்றனர்.

Comment

Successfully posted