மாநில அளவிலான பாவை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

Jan 14, 2020 01:26 PM 1079

மாநில அளவிலான பாவை போட்டிகளில் வெற்றி பெற்ற 36 மாணவ, மாணவிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பதக்கங்களை வழங்கி பாராட்டினார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மார்கழி ஒன்றாம் தேதி முதல் இந்து சமய அறநிலையத் துறை சார்பில், திருப்பாவை பண்ணோடு பாடும் போட்டி, திருவெம்பாவை பண்ணோடு பாடும் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற பாவை விழாவில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

முதல் பரிசு 10 ஆயிரமும், இரண்டாம் பரிசு 5 ஆயிரம் ரூபாயும், மூன்றாவது பரிசு ரூ 2,500 ரூபாயும் என வெற்ற பெற்ற 36 மாணவ, மாணவிகளுக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வழங்கி ஊக்கப்படுத்தினார். நிகழ்ச்சியில் மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நடராஜ் கலந்து கொண்டார்.

Related items

Comment

Successfully posted