இத்தாலியின் சிசிலி தீவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்

Dec 25, 2018 12:15 PM 426

இத்தாலியின் சிசிலி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து மவுண்ட் எட்னா எரிமலை வெடிக்கத் தொடங்கியுள்ளது.

ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா இத்தாலியின் சிசிலி தீவில் அமைந்துள்ளது. இந்நிலையில் அங்கு ரிக்டர் அளவுகோலில் 3.3 என்ற அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து எட்னா எரிமலை வெடிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலம் சூழ்ந்துள்ளது.

எரிமலை வெடிப்பை தொடர்ந்து சிசிலி தீவில் உள்ள கட்டானியா விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே எட்னா எரிமலை வெடிப்பு அடிக்கடி ஏற்படுவதாகவும், கடந்த சில மாதங்களாக எரிமலை வெடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவதாகவும், இத்தாலி தேசிய ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Comment

Successfully posted