தாளவாடி அருகே பசு மாட்டை கொன்ற புலி

Feb 13, 2020 11:10 AM 311

ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் புலி கடித்து பசுமாடு பலியானதால், அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தலமலை காந்திநகர் கிராமத்தில், நாகேந்திரன் என்பவரது பசுமாடு மேய்ச்சலுக்கு சென்றது. தோட்டத்தில் விடப்பட்ட பசுமாட்டின் அலறல் சத்தம் கேட்டு, நாகேந்திரன் சென்று பார்த்த போது, மாடு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளது.

தகவலறிந்து வந்த வனத்துறையினர், அந்த பகுதியில் இருந்த கால்தடத்தை வைத்து, புலி தான் மாட்டை கொன்றதை உறுதி செய்தனர். ஊருக்குள் சுற்றித் திரியும் ஒற்றை புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Comment

Successfully posted