தர்பாரில் இடம்பெறும் திருநங்கைகள் பாடிய பாடல்

Dec 05, 2019 03:24 PM 1272

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தில் திருநங்கைகள் இணைந்து பாடல் ஒன்றை பாடியுள்ளனர்.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகிபாபு ஆகியோர் நடித்துள்ள படம் ‘தர்பார்’. பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தர்பார் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கடந்த வாரத்தில் தர்பார் படத்தில் ‘சும்மா கிழி’ என்ற ரஜினியின் அறிமுக பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, டிசம்பர் 7-ந் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

இந்நிலையில் தர்பார் படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றை திருநங்கைகள் பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாடலாசிரியர் விவேக் எழுதிய இந்த பாடலை ஐதராபாத்தில் செயல்படும் ஸ்பைஸ் கேர்ள்ஸ் எனும் இசை குழுவை சேர்ந்த சந்திரமுகி, ரச்சனா, பிரியா ஆகிய திருநங்கைகள் இந்த பாடலை பாடியுள்ளனர். இது நிச்சயம் திருநங்கைகளை பெருமைப்படுத்தும் பாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comment

Successfully posted