தமிழக அரசின் சாதனைகளை எடுத்துரைக்கும் நடைபயணம்

Nov 15, 2019 09:14 AM 80

மதுரையில் தமிழக அரசின் சாதனைகளை எடுத்துரைக்கும் விதமாக ஜோதியுடன் நடந்த தொடர் நடைபயணத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

மதுரை மேலூர் பகுதியில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஏராளமான இளைஞர்கள் தமிழக அரசின் சாதனைகளை விளக்கி துண்டு பிரசுரங்கள் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் அரசின் சாதனைகளை மக்களிடத்தில் எடுத்துரைக்கும் வகையில் ஜோதியுடன் தொடர் நடைபயணம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பொதுமக்களை சந்தித்த அமைச்சருக்கு பள்ளி மாணவ மாணவிகள் மரக்கன்றுகள் வழங்கியும் ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பளித்தனர். கொட்டும் மழையில் நடந்த இந்த தொடர் நடைபயணத்தில் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் உள்பட அதிமுக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

Comment

Successfully posted