சொத்து தகராறு காரணமாக கணவரின் அண்ணனை கொலை செய்த பெண்

Feb 13, 2020 03:04 PM 224

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சொத்து தகராறு காரணமாக கணவரின் அண்ணனையும் அவரது மனைவியையும் சரமாரி வெட்டிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.  

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கம்மகிருஷ்ணபள்ளி பகுதியை சேர்ந்த சகோதரர்களான முருகேசன், வெங்கடேசனுக்கு இடையே சொத்து பிரச்சினை இருந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடேசன் இறந்து விட்ட நிலையில், வெங்கடேசனின் மனைவி சித்ரா ஒரு பெண் குழந்தையுடன் வறுமையில் வாடியுள்ளார்.

இந்நிலையில், கணவரின் அண்ணன் முருகேசனின் வீட்டிற்கு அரிவாளுடன் சென்ற சித்ரா, உறங்கிக் கொண்டிருந்த முருகேசனின் கழுத்து மற்றும் தலைப்பகுதியில் சராமாரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, முருகேசனின் மனைவி விஜயாவையும் வெட்டிவிட்டு சித்ரா தப்பியோடிவிட்டார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த உமராபாத் காவல்துறையினர், பதுங்கியிருந்த சித்ராவை கைது செய்தனர்.

Comment

Successfully posted