ஒரு கையை இழந்தும் நம்பிக்கையை இழக்காத இளைஞர்..

Jun 25, 2019 06:17 PM 81

உடலில் ஒரு கையில்லாத போதிலும் தனது அயராத முயற்சியால் தேசியளவில் கால்பந்தாட்ட போட்டிக்கு தேர்வாகியிருக்கிறார் தேனியை மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன்..

கோட்டூர் கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி பால முருகன். தாய் மற்றும் தனது தங்கையுடன் வசித்து வரும் இவர், தந்தையை இழந்தவர். தாயின் ஆதரவால் பட்டப்படிப்பை முடித்துள்ளார். சிறுவயது முதலே கால்பந்தின் மீது ஆர்வமுள்ள இவர், உறவினர்கள் உதவியால் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட போட்டிகள், மாநில போட்டிகளில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிபடுத்தியுள்ளார். இதனால் கடந்த 2017 ஆம் ஆண்டு கோவாவில் தேசியளவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான 7 பேர் பங்கேற்கும் மினி கால்பந்து போட்டியில் தேர்வாகியது மட்டுமல்லாமல் அணிக்கு தலைமை பொறுப்பை ஏற்று இரண்டாம் பரிசு பெற்றுக் கொடுத்துள்ளார்.

Comment

Successfully posted