டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி: தலைவர்கள் வாழ்த்து

Feb 12, 2020 06:37 AM 477

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியமைக்கும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் ட்விட்டர் வாயிலாக தனது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

ஆம் ஆத்மி கட்சியின் தமிழக மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன் , ‘ஊழல் இல்லாமல் மக்களுக்கு நல்லாட்சி கொடுத்ததால் ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லி மக்கள் மீண்டும் வெற்றியை தந்துள்ளார்கள்’ என  தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சிகு கிடைத்த இந்த பெரிய வெற்றி, இன்னும் அதிக எதிர்பார்ப்புகளை டெல்லி மக்களிடம் ஏற்படுத்தி உள்ளதாக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி தெரிவித்துள்ளார். எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் இடத்தில் அந்த கட்சி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Comment

Successfully posted