அரக்கோணத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆய்வு கூட்டம்

Oct 18, 2018 11:46 AM 256

2019 ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி தொடர்பான ஆய்வு கூட்டம் அரக்கோணம் தொகுதியில் நடைபெற்றது.

அம்மூர், ராணிப்பேட்டை, வாலாஜா உள்ளிட்ட 11 இடங்களில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சூ.ரவி, கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினர் லோகநாதன், முன்னாள் அமைச்சர் முகமது ஜான் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ஆய்வுக் கூட்டத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் ரவி, கடந்த காலங்களில் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தனி நபராக நின்று வெற்றியை பெற்றுத் தந்தார் என்றும், அந்த வெற்றியை தக்கவைக்க முனைப்புடன் பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்த கூட்டத்தில், ஏராளமான அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

Comment

Successfully posted