அதிமுக வேட்பாளர் ராஜேஷ், மினி மாரத்தான் ஓட்டம் மேற்கொண்டு பிரசாரம்

Apr 16, 2019 11:17 AM 61

சென்னை பெரம்பூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜேஷ், மினி மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்று வாக்கு சேகரித்தார்.

பொதுமக்களிடையே சின்னத்தையும், வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் சென்னை பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் வித்தியாசமான முறையில் பரப்புரையை மேற்கொண்டார். சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட மினி மரத்தான் ஓட்டத்தில், அனைவரும் மஞ்சள் நிறத்தில் ஆன இரட்டை இலை சின்னம் மற்றும் எல்லோரும் வாக்களிப்போம் என்ற வாசகத்தை பொறித்த ஆடையை அணிந்து ஓடினர்.

கொடுங்கையூர் முதல் பெரம்பூர் சர்மா நகர் வரை நடைபெற்ற இந்த விழிப்புணர்வு மினி மாரத்தானில், இரட்டை இலைக்கு வாக்களிக்கும்படி வேட்பாளர் ராஜேஷ் வாக்கு சேகரித்தார்.

Comment

Successfully posted