மறுவாக்குப்பதிவை சீர்குலைக்க திட்டம்: திமுக, அமமுக கட்சிகள் மீது அதிமுக வேட்பாளர் புகார்

May 16, 2019 07:55 AM 80

மறுவாக்குப்பதிவின் போது அமைதியை குலைக்க திட்டமிட்டுள்ளதாக திமுக, அமமுக கட்சிகள் மீது பெரியகுளம் சட்டப்பேரவை அதிமுக வேட்பாளர் மயில்வேல் புகார் அளித்துள்ளார்.

தேனி மாவட்டம், பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 197-வது வாக்குச்சாவடியில் வரும் 19-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் அ.ம.மு.க., திமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை அமைதியான முறையில் நடைபெறவிடாமல் செய்யும் நோக்கோடு செயல்படுவதாக அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வாக்களிக்க வரும் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களித்திட தகுந்த பாதுகாப்பு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரியகுளம் சட்டப்பேரவை அ.திமுக வேட்பாளர் மயில்வேல் பெரியகுளம் சட்டப்பேரவை தேர்தல் அலுவலர் ஜெயப்ரீத்தாவிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

Comment

Successfully posted