அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்

Jul 09, 2021 10:09 PM 680

கழக வளர்ச்சி பணிகள் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் தொடர்பாக அதிமுக மாவட்ட செயலாளர்களுடன், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆலோசனை நடத்தினர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள், எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்த ஆலோசிக்கப்பட்டது. அப்போது, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர், தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

Comment

Successfully posted