மக்களை நம்பி அதிமுக இருக்கிறது, பணத்தை நம்பி இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்

Apr 16, 2019 12:58 PM 77

மக்களை நம்பி அதிமுக இருப்பதாகவும், பணத்தை நம்பி இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் வடசென்னை மக்களவைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜை ஆதரித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் அதிமுக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அலை வீசி வருவதாகவும், இந்த அலையில் திமுக-காங்கிரஸ் கூட்டணி இடம் தெரியாமல் போய்விடும் என்று கூறினார்.

மக்களை நம்பி அதிமுக இருப்பதாகவும், பணத்தை நம்பி இல்லை என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார், நேற்று இரவு முழுவதும் திமுகவினரும், தினகரன் அணியினரும் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டினார்.

 

Comment

Successfully posted