செஞ்சி அருகே அதிமுக ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

Feb 07, 2019 08:16 AM 321

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நடைபெற்ற அதிமுக ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

அதிமுக ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கன்னலம், தேவனூர் மற்றும் பெருவளூர் பகுதிகளில் நடைபெற்றது. இதில் அமைச்சர் சி.வி. சண்முகம் கலந்து கொண்டு கழக வளர்ச்சி மற்றும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

அப்போது பேசிய அவர், உள்ளாட்சி தேர்தல் வெற்றிதான் கழகத்தின் ஆணிவேர் என்று கூறினார். இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தெரிவித்தார். இன்னும் ஒரு வார காலத்திற்குள் பூத் கமிட்டி பெயர் பட்டியலை தயார் செய்து வழங்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

Comment

Successfully posted