அதிமுக பொன்விழா ஆண்டை சீரோடும் சிறப்போடும் கொண்டாட தீர்மானம்

Jul 09, 2021 10:15 PM 712

அதிமுக-வின் 50-ஆவது ஆண்டு பொன்விழாவை சிறப்பாக கொண்டாடுவது என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஏழை, எளிய மக்கள் வாழ்க்கையில் பல உயரங்களைத் தொட வேண்டும் என்பதற்காகவும், தீய சக்திகளிடம் இருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் 16 லட்சம் தொண்டர்களோடு தொடங்கப்பட்ட இயக்கம் அதிமுக என தெரிவிக்கப்பட்டது.

மறைந்த புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் உழைப்பால், அதிமுக ஒன்றரை கோடி தொண்டர்களைக் கொண்ட மிகப்பெரிய இயக்கமாக, எஃகு கோட்டையாக தற்போது 50-வது ஆண்டு பொன்விழாவில் அடியெடுத்து வைப்பதாக அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.

அதிமுக பொன்விழா ஆண்டை சீரோடும் சிறப்போடும் கொண்டாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு மட்டுமல்லாமல் கழகம் செயல்படும் பிற மாநிலங்களிலும் பார் போற்றும் பெருவிழாவாக மிக விமரிசையாக, மக்கள் நலத்திட்டங்கள் பலவற்றை வழங்கி கொண்டாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

Comment

Successfully posted